மாலை நேரம்
மழை தூறும் காலம்
என் ஜன்னல் ஓரம்
நிற்கிறேன் ...
ஒரு போர்வைக்குள்ளே
சிறு மேகம் போலே
மிதக்கிறேன் ...
உடன் ஓடும் நினைவுகள்
வழி மாறும் பயணங்கள்
தொடர்கிறதே..
ஒரு துணை தான் தேவையா
மனம் ஏனோ என்னையே
கேட்கிறதே.....
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது
அன்பே.....
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம்
அன்பே...
உன் கரம் கோர்கையில்
நினைவு ஓராயிரம்
பின் இரு கரம் பிரிகையில்
நினைவு நூறாயிரம்..
மீட்கமுடியாதது..
கனவில் தொலைந்த நிஜங்கள்
மீண்டும் கிடைக்காதது..
தேடவும் மனம் வரவில்லை
பிரிந்ததும் புரிந்தது
நான் என்ன இழந்தேன் என ...
நீயாய் வந்தால் என்ன
நான் கேட்கவே துடித்திடும்
வார்த்தை சொன்னால் என்ன..
பொறுத்து கொண்டால் என்ன
இரு திசை பறவைகள் இணைந்து
விண்ணில் சென்றால் என்ன ..
உன் கனவுகள் நான் இல்லை..
இரு விழி பார்வையில்
நாம் உருகி நின்றால் என்ன ...
No comments:
Post a Comment