கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி
கிட்டக் கிட்ட வந்தாய் துள்ளி
எட்டிப் போய்விடு இல்லை ஏதோ ஆகிடும்
காதல் கொஞ்சம் பேசும்போது
சென்னைத் தமிழும் செந்தேன் தான்
ஆசை வெள்ளம் பாயும்போது
வங்கக்கடலும் வாய்க்கால் தான்
அன்பே வா ஹா..
காதல் வரம் நான் வாங்க
கடைக்கண்கள் நீ வீச
கொக்கைப்போல நாள்தோறும்
ஒற்றைக்காலில் நின்றேன் கண்மணி
No comments:
Post a Comment