உன்னை மாதிரி யாரும் இல்லை
யார் மாதிரி நீயும் இல்லை
நீ ஒருத்தி தான் நீ ஒருத்தி தான்
உன்னை மாதிரி யாரும் இல்லை
யார் மாதிரி நீயும் இல்லை
நீ ஒருவன் தான் நீ ஒருவன் தான்
எந்தன் இதயத்திலும் நீ ஒருவன் தான்
நீ இந்த பூமியில் பிறப்பாய் என்று
நான் முன்பே அறிந்திருந்து வந்து
உனக்காக காத்து இருக்கிறேன்
நான் உந்தன் கண்ணில் தூங்கிட வேண்டும்
உன் கனவுகள் முழுவதும்
நான் தினம் பார்த்து ரசிப்பேன் அன்பே
கனவிலே என் கனவிலே தினம்
வருவதும் வருவதும் நீ தானே
உதடுகள் என் உதடுகள் உன்
குறும்பை இனியும் தாங்காதே
கோடியிலே ஒரு தேவதை நீ
வாழும் வரை உன் சேவகன் நான்
இது காதல் காதல் மீது சத்தியமே
ஒவ்வொரு முறையும்
நான் உன்னை நேரில் பார்க்கிற போதும்
என் ஆயுள் கணக்கில்
ஒரு தினம் கூடி போகுது உயிரு
வேண்டும் என்றால் உயிர் வேண்டும் என்றால்
நீயும் மெதுவாய் உன்னை கிள்ளி கொள்ளு
வலிக்குமே என்று தயங்கினால்
நீ பொய்யாய் உன்னை கிள்ளி கொள்ளு
ஒரு கண்ணால் நீ பார்த்தாலும்
இரு கண்ணால் உன்னை காண்பேனே
உன்னை வேண்டி வேண்டி உயிர் அலைகிறதே
உன்னை மாதிரி யாரும் இல்லை
யார் மாதிரி நீயும் இல்லை
நீ ஒருத்தி தான் உன் ஒருத்தி தான்
உன்னை மாதிரி யாரும் இல்லை
யார் மாதிரி நீயும் இல்லை
No comments:
Post a Comment